முன்னாள் காதலனை சந்தித்த மனைவியின் கழுத்திலேயே வெட்டிய வெட்டிய கணவன் கைது..!

முன்னாள் காதலனை சந்தித்த மனைவியின் கழுத்திலேயே வெட்டிய வெட்டிய கணவன் கைது..!

 

முன்னாள் காதலனை சந்தித்த மனைவியின் கழுத்திலேயே வெட்டிய வெட்டிய கணவன் கைது..!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் மனைவியின் கழுத்தை அவரது கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (09) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26 வயதுடைய மூன்று பிள்ளையின் தாயொருவரே கணவரின் (33) தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கணவன் – மனைவிக்கு இடையில் நேற்று (08) மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.  பின்னர் கணவனிடம் மனைவி தொழிலுக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்று அன்றிரவு தங்கியுள்ளார்.

எனினும் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதிலிருந்து புதன்கிழமை காலை வரை மனைவியிடம் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வராத காரணத்தால், 


காலை 8 மணியளவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் திடீரென அதே பகுதியை சேர்ந்த முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது காதலன் தொழிலுக்குச் சென்ற நிலையில் மனைவி அவரது வீட்டில் இருந்ததை அவதானித்த கணவன் மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சந்தேகநபர் டயகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments