✅👉நாளை முதல் அதிகரிக்கும் மழையுடனான வானிலை..!
நாட்டின் தென்மேற்கு திசையில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
0 Comments