மேல் மாகாண முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் !

மேல் மாகாண முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் !

 

மேல் மாகாண முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் !



முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று (09) முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 85 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments