✅👉சிலாபம் பகுதி வீடொன்றில் தீ விபத்து,
✅👉தந்தை, தாய் மற்றும் மகள் உயிரிழப்பு..!
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments