✅👉சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது..!

✅👉சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது..!

✅👉சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு: 31 இளைஞர்கள் கைது..! 

நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைதான இளைஞர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதான இளைஞர்கள் 19 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களை நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments