✅👉தூங்கிக்கொண்டிருந்த தந்தையும் மகளும் பாம்பு கடித்து பலி..!

✅👉தூங்கிக்கொண்டிருந்த தந்தையும் மகளும் பாம்பு கடித்து பலி..!

✅👉தூங்கிக்கொண்டிருந்த தந்தையும் மகளும் பாம்பு கடித்து பலி..! 

தூங்கிக்கொண்டிருந்த தந்தையும் மகளும் பாம்பு கடித்து பலி. 

இந்தியாவின் ஒடிசாவில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் இருவரும் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டத்தின் சாரிச்சக் கிராமத்தில் சுகந்த் கன்ஹரும் அவரது 12 வயது மகள் லிபிகாவும் கடந்த வெள்ளிக்கிழமை (18) இரவு தங்கள் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவரையும் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. உடனே இருவரும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தார்.

பலியானவர் குமாகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் சாரிச்சாக்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து தந்தை-மகள் ஒரே நேரத்தில் பலியான நிகழ்வு அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments