✅👉பெண் ஒருவர் தலைமையிலான கொள்ளைக் குழு,
✅👉பல பிரதேசங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொம்மை கைத்துப்பாக்கி காட்டி,
✅👉அச்சுறுத்தி தங்க ஆபரணங்கள, பணத்தை கொள்ளையடித்து வந்த நிலையில் கூண்டோடு பிடிபட்டனர்..!
ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்கு தலைமை தாங்கிய பெண் உட்பட ஐவர் பல பிரதேசங்களில் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பொம்மை கைத்துப்பாக்கி காட்டி அச்சுறுத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாக,
வென்னப்புவ பொலிஸார் தெரிவித்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களையும் வென்னப்புவ தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மத்துகம பிரதேசத்தில் வாடகைக்கு வசித்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவர், அவரது 33 வயதுடைய கணவர், பெண்ணின் சகோதரர்கள் இருவர் மற்றும் நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சில நாட்களாக விடுதிகளில் தங்கி சுற்றுவட்டார வீடுகளில் இரவு பகலாக கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
0 Comments