✅👉இளம் தம்பதியினர் காட்டுக்குள் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ✅👉உயிரை மாய்த்துக்கொண்ட னர்..!

✅👉இளம் தம்பதியினர் காட்டுக்குள் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ✅👉உயிரை மாய்த்துக்கொண்ட னர்..!

✅👉அதிக கடன் சுமை..! 

✅👉இளம் தம்பதியினர்  காட்டுக்குள் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, 

✅👉உயிரை மாய்த்துக்கொண்ட னர்..! 

பன்னல, களனியமுல்லை காப்புக்காடு பகுதியில் இன்று (19) காலை இளம் ஜோடியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமான தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆண் 37 வயதுடையவர் எனவும் அவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு 32 வயது எனவும் அவர் ஆசிரியை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவருக்கும் பாலர் வயது குழந்தை ஒன்றும் இருப்பது தெரியவந்துள்ளது.

இருவரது சடலங்களும் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதுடன், இருவரும் கடும் கடன்சுமை மற்றும் பணப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதவிர, தம்பதியினர் காப்புக்காட்டுக்கு வர பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments