✅👉 சிவப்பு சீனியின் VAT வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும்..!
சிவப்பு சீனி மீது VAT வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படுமென கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு VAT அறவிடப்படுவதில்லை என்றும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சர்க்கரைக்கு 18% VAT மற்றும் 2.5% வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போது ஒரு கிலோ சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிவப்பு சீனி அத்தியவசியமற்ற பொருளாகவும், இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தி, இந்த விடயம் கூடிய விரைவில் சரி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
0 Comments