✅👉புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – இருவர் மீண்டும் விளக்கமறியலில்..!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் அலவ்வ பிரதேச மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments