✅👉 பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை..!

✅👉 பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை..!

✅👉 பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை..!


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்த பகுதிகளில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

Post a Comment

0 Comments