✅👉யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்,
✅👉இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி..!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்;.அண்மையில் பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார்.அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய,
சனத் ஜயசூரிய என்னிடம் ' ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும்' என வினவினார்.அப்போது 'எவ்வாறாவது யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும்' என்றேன்.
முதல் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் ஒன்றுப்பட வேண்டும். கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், உட்பட அனைத்து துறைகளிலும் திறமைக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
0 Comments