✅👉சிறுவர், சிறுமியரின் ஆபாச படங்கள் வீடியோக்களை,
✅👉தயாரித்த, மற்றும் வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது..!
ஆனமடுவை பகுதியைச் சேர்ந்த 34 வயது ஆண் ஒருவர், 13 வயது சிறுமியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள National Center for Missing & Exploited Children (NCMEC) அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,
பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் தொலைபேசி பழுது நீக்கும் மையம் ஒன்றை நடத்தி வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர், 2022 ஆம் ஆண்டு முதல் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இவர் இலங்கையில் 13 வயது சிறுமியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
0 Comments