✅👉விமானத்திலுள் பணிப்பெண்களை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயற்சித்த நபர், ✅👉விமான நிலைய பொலிஸாரால் கட்டுநாயக்கவில் கைது..!

✅👉விமானத்திலுள் பணிப்பெண்களை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயற்சித்த நபர், ✅👉விமான நிலைய பொலிஸாரால் கட்டுநாயக்கவில் கைது..!

✅👉விமானத்திலுள் பணிப்பெண்களை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயற்சித்த நபர், 

✅👉விமான நிலைய பொலிஸாரால் கட்டுநாயக்கவில் கைது..!

மும்பையில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்திற்குள் இருந்த பயணிகளுக்கு தொந்தரவு மற்றும் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பயணி இன்று (12) காலை விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான இவர் சுவீடன் மற்றும் இலங்கை (யாழ்ப்பாணம்) ஆகிய இரு நாடுகளிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.

அவர் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-144 இல் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது, 

அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

அதன்பிறகு, விமானத்தில் இருந்த பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளத் தொடங்கிய அவர், 

விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமானப் பணிப்பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

பின்னர், விமானத்தின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைக் கட்டுப்படுத்தி, இந்த சம்பவம் குறித்து விமானிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த அறிவித்தலின் பிரகாரம் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதையடுத்து, 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விமான நிலைய பொலிஸாருடன் வந்து பயணியை கைது செய்துள்ளனர்.

அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் இலக்கம் 01 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.


Post a Comment

0 Comments