✅👉திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி..!

✅👉திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி..!

✅👉திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி..! 

இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தின்படி, திருமணமான தம்பதியர் மட்டுமே வெளிநாட்டு குழந்தையை தத்தெடுக்க முடியும். 

மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. 

இதனை எதிர்த்து குழந்தை தத்தெடுப்புக்கான இத்தாலிய சங்கம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. 

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

அதாவது வெளிநாட்டு குழந்தைகளைத் தத்தெடுப்பது வெகுவாக குறைந்து வருகிறது. 

இது குடும்ப சூழலில் வளர்வதற்கான குழந்தைகளின் உரிமையை மறுப்பதாக உள்ளது. 

எனவே 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்வதேச தத்தெடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் திருமணம் ஆகாதவர்களும் இனிமேல் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க முடியும். 

இதே போல் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், திருமணம் ஆகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

✅செய்திகளை உடனுக்குடன் பெற எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்..!

🚨 Acc News Group Link

https://chat.whatsapp.com/Fbpf3zQQSsU4NduUmvXbNr

Post a Comment

0 Comments