✅👉யூடியூப் பார்த்து டயட் இருந்த இளம் பெண் உயிரிழப்பு..!

✅👉யூடியூப் பார்த்து டயட் இருந்த இளம் பெண் உயிரிழப்பு..!

✅👉யூடியூப் பார்த்து டயட் இருந்த இளம் பெண் உயிரிழப்பு..!



இன்றைய தலைமுறையினர் சத்தான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். 

இதற்கு காரணம் நாகரிகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் என்றே கூறலாம். 

அதுபோன்ற உணவு மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுபவர்கள் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

இதன் காரணமாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது உள்ளிட்ட நோய்களுக்கு அவர்கள் ஆளாகின்றனா். 

இதற்காக உடல் எடையை குறைக்க பலரும் தீவிர முயற்சி செய்கின்றனர். 

அவ்வாறு செய்பவர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. 

அதுபோன்ற சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது 18).

இவரது உடல் எடை அண்மை காலங்களில் அதிகாித்ததாக தெரிகிறது. 

இதையடுத்து அவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் யூடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளார். 

எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து தேடி எடுத்து வீடியோவை பார்த்து வந்துள்ளார். 

மேலும் அந்த வீடியோக்களில் கூறுவது போல் உணவு பழக்கத்தை மாற்றி உள்ளார்.

அப்படி செய்து வந்த நிலையில், ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

மேலும் அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. 

இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கையில்,

ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையை குறைக்க குறைந்தளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியதாகவும், அதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்ததாகவும் கூறினர்.

யூடியூப் பார்த்து டயட் மெயின்டெயின் செய்த இளம் பெண், உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments