✅👉முதியோர் இல்லத்தில் இருந்தபடி,
✅👉கொழும்பில் உள்ள காணி ஒன்றை போலி ஆவணங்கள் மூலம்,
✅👉50 மில்லியன் ரூபாவுக்கு விற்ற 83 வயது பெண் கைது..!
⭕️அதிசயம் ஆனால் நிஜம்
83 வயதுடைய பெண்ணொருவர், கொள்ளுப்பிட்டியில் உள்ள வேறொரு நபருக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்கள் மூலம் 50 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 03, கொள்ளுப்பட்டி லேனில் உள்ள காணியை விற்ற நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக மோசடிப் பிரிவு 2021 இல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்திருந்தது.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பத்தரமுல்லையில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments