✅👉சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்பு : -

✅👉சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்பு : -

✅👉சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்பு : - 

✅👉ஒருவர் கைது!


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் பெறுமதி வாய்ந்த "Hero Passan Pro" என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சைக்கிள் உரிமையாளரினால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஜனவரி முதல் வாரத்தில் முறைப்பாடு செய்யதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக அதிரடியாக தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட போது பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிளும், சந்தேக நபரும் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பில், கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததுடன். பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் இருப்பது தெரியவந்துள்ளது.


பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது மோட்டார் சைக்கிள் காணாமல் போன என்று முறைப்பாடு செய்தவரின் மகன் வீட்டிற்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.


சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் அவர்களின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments