✅👉காலியில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த மூவர் சுட்டுக் கொலை..!
காலி, ஹினிதும பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு 11:15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்த போது இந்த 3 பேரும் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 29 மற்றும் 54 வயதுடைய இருவர் அடங்குவதுடன், மற்றவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
சந்தேக நபர்களை கண்டுபிடிக்க ஹினிதும பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
0 Comments