✅👉இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி..!

✅👉இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி..!

✅👉இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி..!

இலங்கையிலிருந்து கோழி இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சீனா சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடையீட்டில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை முறைகளுக்கமைய மேற்கொள்வதற்கு, 

இரு நாடுகளும் உரிய நடவடிக்கை முறைகள் தொடர்பாகப் பரிசோதித்தல்,

தொற்றுக் காப்பு மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளடக்கிய தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் சீனா சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் அமைச்சுக்கிடையில் கையொப்பமிடுவதற்கு விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments