✅👉விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

✅👉விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

✅👉விமான நிலையத்தில் சட்டவிரோதமான தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது..! 

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடமிருந்து ​​4 தங்க நெக்லஸ்கள், 1 பென்டன், 02 வளையல்கள், 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments