✅👉வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை...! ✅👉அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு..!

✅👉வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை...! ✅👉அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு..!

✅👉வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை...! 

✅👉அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு..! 

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில், 

6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

பெண்­ணுக்கு 50 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும் ஆணுக்கு 100 கசை­ய­டியை ஒத்த தண்­ட­னையும் பள்­ளி­வா­சலில் வைத்து வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில், 

இது குறித்து வாழைச்­சேனை பொலி­சா­ருக்கு கிடைத்த தகவல் மற்றும் முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போதே, குறித்த நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட 6 பேரை வாழைச் சேனை பொலிசார் கைது செய்­துள்­ள­துடன், 

அவர்கள் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வாழைச்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கூறினார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

Post a Comment

0 Comments