✅👉5 இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் ‘இமிக்ரேஷன் ஆப்பிசர்’ கைது..!
வெலிசர தடுப்பு முகாமில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் 5 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில்,
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா காலாவதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நபரை விடுவிக்க அந்த அதிகாரி அந்தத் தொகையை கோரியதாகக் கூறப்படுகிறது.
முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன், சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
0 Comments