✅👉பயணிக்கு டிக்கட் கொடுக்காமல் ஏமாற்ற முயற்சித்த பஸ் கண்டக்டர் கைது..!
பயணி ஒருவரிடம் பணம் பெற்றுவிட்டு பயணச் சீட்டு வழங்காத பஸ் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண தனியார் போக்கு வரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பஸ்வண்டி நடாத்துனர் ஒருவர்,
பயணி ஒருவருக்கு டிக்கட் வழங்காது இருந்ததுடன் அவரை தூற்றியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி நடாத்துனரை போக்குவரத்து அதிகார சபை பணி நீக்கம் செய்துள்ளது.
மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திருமதி. மதுபானி பியசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய பயணிகள் போக்குவர்து அதிகார சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கண்டியில் இருந்து கம்பளை நோக்கிச் சென்ற தனியார் பஸ்வண்டி ஒன்றில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரித்த போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
0 Comments