✅👉புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படுமா..?
செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.
மனு மீதான விசாரணையை வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது தெரிவித்தது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும்,
முதல் வினாத்தாளை இரத்துச் செய்யுமாறும் கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சட்டமா அதிபர் விராஜ் தயாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரானதோடு, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் ஆஜராகினர்.
✅ Acc News WhatsApp Group👇
https://chat.whatsapp.com/Fo3lrOTnMsRGWVLnuiucEr
0 Comments