✅👉கைப்பேசி சார்ஜர் வெடித்ததில் 6 பேர் பலி..!
சவுதியில் கைப்பேசி சார்ஜர் வெடித்து ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை காலை Hufoof அல்நாதல் மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் சவுதியை சேர்ந்த முக்கியமான அல்ஜீப்ரான் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஐந்து பேர் உடன்பிறந்தவர்கள் மற்றும் ஒருவர் அவர்களின் மருமகன்.
விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீயில் புகையை சுவாசித்ததால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரவில் கைப்பேசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய மொபைலை போட்டு விட்டு துங்கியதால் வெடித்து சிதறியுள்ளது.
முதலில் அமரக்கூடிய அறையில் இருந்த சோபா செட்டியில் தீப்பிடித்தது.
பின்னர் தீ வேகமாக வீட்டிற்குள் முழுவதும் பரவியது. பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ஆறு பேரின் உடல்களையும் அல்-குதுத் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
🚨 Acc News WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/KPszx4Me4d6IcNoopTnzh2
0 Comments