✅👉உணவுப் பொருட்களின் விலை 30% வீதத்தால் அதிகரிக்கப்படும்..!
சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள கேன்டீன்களில் தேங்காய் சம்பல் மற்றும் பால் குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் கூறுகையில்
ஒரு தேங்காயின் விலை ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் விலை 30% வீதத்தால் கேன்டீன்களில் அதிகரிக்கப்படும் என திரு.ருக்ஷான் தெரிவித்தார்.
கோழிக்கறி கிலோ ரூ.1,200ல் இருந்து ரூ.1,280 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
அவரது கருத்துப்படி, அப்பம் தயாரித்தல் மற்றும் உள்நாட்டில் விற்பனைக்கு மதிய உணவுப் பொட்டலங்கள் தயாரித்தல் ஆகியவையும் தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.
0 Comments