✅👉லொரி ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு..!

✅👉லொரி ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு..!

✅👉லொரி ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு..! 

லொரி ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு. 

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம் என 119 இற்கு வந்த அழைப்பை அடுத்து இடம்பெற்ற சோதனையில் சிக்கியது. 

வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறியை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு, தோட்டாக்கள், டி 56 துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

இதையடுத்து லொறியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் T-56 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, 

 பொலிஸார் உடனடியாக செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது T-cut துப்பாக்கி, வெடிகுண்டுகள், மற்றும் லாரியின் மேல் பகுதியில் மெழுகு பையில் சுற்றப்பட்ட தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments