✅👉போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள அறிக்கை போலியானது..!
தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும்.
போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments