✅👉மழையுடனான வானிலை..! ✅👉பல ரயில் சேவைகள் இரத்து..!

✅👉மழையுடனான வானிலை..! ✅👉பல ரயில் சேவைகள் இரத்து..!

✅👉மழையுடனான வானிலை..! 

✅👉பல ரயில் சேவைகள் இரத்து..!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(27) கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த உதயதேவி ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவையையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த அஞ்சல் ரயில் சேவையையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments