✅👉பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை..!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையுடன் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
2 ஆம் கட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல
காலி மாவட்டம் – பத்தேகம, எல்பிட்டிய, நாகொட
களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள,
கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய
கேகாலை மாவட்டம் – புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை
மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம, நாவுல, மாத்தளை
மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை
இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த
0 Comments