✅👉சமையல் எரிவாயு விலையானது டிசம்பரில் கண்டிப்பாக உயரும்..!

✅👉சமையல் எரிவாயு விலையானது டிசம்பரில் கண்டிப்பாக உயரும்..!

✅👉சமையல் எரிவாயு விலையானது டிசம்பரில் கண்டிப்பாக உயரும்..! 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் எதிர்பார்க்காதளவு உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தல் மேடைகளில் கூறியவை உண்மை எனின், அவர்களுக்கு திட்டங்கள் இருப்பின் கடந்த எரிபொருள் விலைத் திருத்தங்கள் இரண்டிலும் வரியினை நீக்கி எரிபொருள் விலைகளை குறைக்க முடியுமாக இருந்திருக்க வேண்டும். 

அதற்கு பாராளுமன்றம் தேவையில்லை, அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படலாமே.

அன்று அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வைராக்கியம் உருவாக்கப்பட்டது. விலைகளை இப்படியெல்லாம் குறைக்கலாம் என மேடைகளில் கூச்சலிட்டனர்.

இப்போது லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ நிறுவனமானது ஒக்டோபர் நவம்பர் செலவினை சரி செய்யாது தேர்தல் உறுதியாக விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த விலைச்சூத்திரம் வெளியிடப்படுவதில்லை. நான் உறுதியாகக் கூறுகிறேன், டிசம்பர் மாத விலைத் திருத்தத்தில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத, அதாவது விலைகள் அதிகரிக்கப்படாதவற்றை டிசம்பர் மாதம் அதிகளவு அதிகரிக்கப்படும் என கூறுகிறேன்.

Post a Comment

0 Comments