✅👉லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து, ✅👉நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய பெண் கைது..!

✅👉லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து, ✅👉நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய பெண் கைது..!

✅👉லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து, 

✅👉நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய பெண் கைது..! 

லண்டனில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து சமூக வலைத்தளம் மூலம் நபர் ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

லண்டனில் வசித்து வரும் பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வந்து தற்போது குடியிருக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தை தரவில்லை எனத் தெரிவித்து குறித்த பெண் அந்நபருக்கு எதிராக தொடர்ச்சியாக 'Tik Tok' சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தார்.

குறித்த நபர் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார். இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments