✅👉இன்று தேர்தல் தினத்தில் பணம் விநியோகித்த வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது..!
பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு இன்று (14) பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த போது கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபாய் பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments