வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டம்

✅👉வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டம்.! 

E8 விசா முறையின் கீழ் கொரியாவில் பணிக்கு செல்ல எதிர்பார்த்துள்ள குழுவினர் இன்று (24) காலை வரை அதே இடத்தில் தங்கியிருந்ததாக அறிய முடிகிறது. 

E8 விசா முறையின் கீழ் தென்கொரியாவில் பணிக்கு செல்லவிருக்கும் ஒரு குழுவினர் நேற்று (23) காலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரியாவில் பணிபுரிய விசா கிடைத்துள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலட்சியத்தால் தங்களுக்கு கொரியாவுக்கு பயணிக்க முடியாமல் போனதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அருகே உள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரங்களை அமைக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது, 

அங்கு வந்த பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.

இது தொடர்பில் நாம் வினவிய போது, தற்போதுள்ள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் முறையான நடைமுறையைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையினால் குறித்த நபர்களை E8 விசா முறையின் கீழ் பதிவு செய்வது கேள்விக்குறியாகியுள்ளதாக,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று காலை வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

Post a Comment

0 Comments