✅👉வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்..!
இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத் தகடு வழங்காமை தொடர்பில் கடிதமொன்று வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
0 Comments