✅👉வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்..!
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய டிரான்ஸ்கிரிப்ட் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயனர்கள் தமக்கு அனுப்பப்பட்ட குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அம்சம் எதிர்வரும் வாரங்களில் உலகளவில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளுடன் வெளிவரும்.
மேலும் வரும் மாதங்களில் மேலும் பல மொழிகளைச் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
0 Comments