✅👉அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்..!
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,
இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments