✅👉வங்கி அட்டை உள்ளே சிக்கியதால் ஆத்திரமடைந்து ATM இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்திய, ✅👉பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி நீக்கம்..!

✅👉வங்கி அட்டை உள்ளே சிக்கியதால் ஆத்திரமடைந்து ATM இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்திய, ✅👉பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி நீக்கம்..!

✅👉வங்கி அட்டை உள்ளே சிக்கியதால் ஆத்திரமடைந்து ATM இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்திய, 

✅👉பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பணி நீக்கம்..! 

ஏ.டி.எம் இயந்திரத்தில் வங்கி அட்டை சிக்கியதால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொது ஒழுங்கு முகாமைத்துவ பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்றிரவு  கொழும்பு திபிரிகசாய பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற சந்தேகநபர், மதுபோதையில் இருந்ததால், கார்ட் தடைபட்டு, பணம் எடுக்க முடியாமல் ஏ.டி.எம் இயந்திரத்தை தாக்கி அதனை சேதமாக்கி உள்ளார்

நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொது ஒழுங்கு முகாமைத்துவப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபரான சார்ஜனை நேற்று (12) முதல் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.



Post a Comment

0 Comments