✅👉83 இலட்சம் பெறுமதியான வேன் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது..!
மஸ்கெலிய பொலிஸச பிரிவில், சுமார் 83 இலட்சம் பெறுமதியான வேன் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கஹவத்த பொலிஸ் பிரிவில் ஓபேவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர் 28 வயதுடைய ஓபேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments