✅👉அரச சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும்.
இந்நிலையில், இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும்.
மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும்.
போதைப்பொருள் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதாள உலக கும்பலின் செயற்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கம் கடந்த ஜூலை மாதம் அறிமுகம்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற்து.
தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 Comments