✅👉இந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 135,907 சுற்றுலாப் பயணிகளின் வருகை..!
✅👉ஒப்பீட்டளவில் இது 25% அதிகரிப்பை காட்டியுள்ளது..!
ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 135,907 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 25% அதிகரிப்பை காட்டியுள்ளது.
2024 ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 31 வரை 1,620,715 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன, கடந்த ஆண்டு மொத்த வருகை 1,487,303 ஆக இருந்தது.
இந்தியாவில் இருந்து மட்டும் 2024 அக்டோபரில் 36,417 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது மொத்த சுற்றுலா பயணிகள் வருகையில் 26.8% பங்கைக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதமும் வருகை அதிகரித்ததுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, அருகம்பேக்கு பயணம் செய்வதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் பல நாடுகளால் பயண ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் இம்மாதம் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படவில்லை.
0 Comments