✅👉HPV தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்..!

✅👉HPV தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்..!

✅👉HPV தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்..! 


கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்காக HPV தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின், 

ஐந்து மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.

குறித்த ஐந்து மாணவிகளுக்கு வயிற்றுவலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட சம்பவம் குறித்து அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில், 

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த தேவையில்லை என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகளுக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது சிறந்த ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், 

இந்த சிறு பக்க விளைவுகள் குறுகிய காலத்துக்குரியவை என்றும், தேவையற்ற அச்சம் அல்லது பீதியை ஏற்படுத்த தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு உள்ள தடுப்பூசி அச்சம் காரணமாக சிறு மயக்க நிலைகள் ஏற்படக்கூடம் எனவும், 

இது போன்ற பக்க விளைவுகள் பொதுவாக பாடசாலை தடுப்பூசி திட்டங்களில் காணக்கூடியதாக உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments