✅👉சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் : - ✅👉புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு..!

✅👉சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் : - ✅👉புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு..!

✅👉சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் : - 

✅👉புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு..! 

புறக்கோட்டையில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது பல வகையான அழகுசாதனப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அழகுசாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும், 

அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெரிய ஆசை உள்ளது. இளம்பெண்கள் மட்டுமின்றி ஆண் பிள்ளைகளும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. 

இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகுசாதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments