✅👉மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தற்கொலை..!
இந்தியாவின் ஆந்திர மாநிலம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாவட்டம், ஓய்.கோட்டப்பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவருடைய மகள்கள் புஜ்ஜி, சுவாதி (28). சரஸ்வதியின் கணவர் நரசிம்ம ராவ் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இதனால் சரஸ்வதி கூலி வேலை செய்து தனது 2 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்.
இந்நிலையில் மூத்த மகள் புஜ்ஜுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். சரஸ்வதிக்கு திடீரென உடல் நலக்குறைவு மற்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டது.
தாயின் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. தாய் உடல் நல குறைவால் அவதி அடைவதை கண்ட சுவாதி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மின்விசிறியில் சேலையை கட்டி தாயை தூக்கில் தொங்கவிட்டார்.
தாய் இறந்ததை உறுதி செய்த பிறகு சுவாதியும் தாயை தூக்கில் தொங்கவிட்ட புடவையில் மற்றொரு முந்தானையில் தூக்கிட்டு இறந்தார்.
3 நாட்களுக்கு பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. காக்கிநாடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments