✅👉அறநெறி பாடசாலை பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு !
2024 அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் இறுதி திகதி 07.10.2024 இல் இருந்து 21.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தில் குறித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மற்றும் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளக் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.10.2024 க்கு முன்னர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், நிறுவனப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு" என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு - 0112 785 230 / 0112 786 150
0 Comments