✅👉காதலியை கடலில் தள்ளிவிட்ட காதலன்..!
காதலனால் கடலில் தள்ளப்பட்ட காதலியின் தலை பாறையில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (29) பிற்பகல் பயாகல தியலகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பஹல்கொட, பயாகல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய தருஷி செவ்மினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த காதல் ஜோடி பயாகல தியலகொட பிரதேச கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறியதையடுத்து, இளைஞன் தனது காதலியை கடலில் தள்ளிவிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments