✅👉புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று..!
சர்ச்சைக்குரிய சூழலை எதிர்கொண்டுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று விடயங்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் பரிசீலனை உடனடியாக தொடங்கப்பட உள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், பரீட்சைக்கு முன்னர் 03 கேள்விகள் மாத்திரமே வெளிவந்திருந்தன என்பது அந்த பரீட்சை குழுக்களின் இறுதித் தீர்மானமாகும்.
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆனால் பெற்றோர்கள் குழு ஒன்று, செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் நடத்தியது, முழுமையான வினாத்தாள் வெளியிடப்பட்டதாகக் கூறியது.
இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சை விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டது.
0 Comments