✅👉வைரஸ் தொற்று – பன்றி இறைச்சி உண்ண வேண்டாம்..!
தற்போது பன்றிகளுக்கிடையே பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு,
அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணைகளிலும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களிலும்,
விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
0 Comments