✅👉கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வாய்ப்புகள..!

✅👉கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வாய்ப்புகள..!

 

✅👉கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வாய்ப்புகள..!

✅👉கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினர், நேற்று ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பட்டதாரிகளின் பட்டங்களுக்கு ஏற்ப, அரசதுறையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், அரச நிர்வாக துறையை வினைத்திறனாக மாற்றுவதற்கு தேவையான வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டு,

அதற்கு பொருத்தமான துறைசார் பட்டதாரிகளை உள்ளீர்ப்புச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதன்போது பட்டதாரிகள் புதிதாக கடமையை ஏற்றுக்கொண்ட ஆளுநருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments